எட்டு வயது சிறுமிக்கு குடியுரிமை வழங்க தென் ஆப்ரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

Wednesday, September 7th, 2016

கியூபாவிலிருந்து தென் ஆப்ரிக்காவில் குடியேறிய பெற்றோர்களுக்கு பிறந்த எட்டு வயது சிறுமிக்கு தென் ஆப்ரிக்க குடியுரிமையை வழங்கி அந்நாட்டு மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அச்சிறுமிக்கு ஆதரவாக கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்திருந்தது; தென் ஆப்ரிக்காவின் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் அச்சிறுமியால் பள்ளிக்கு செல்ல இயலாது.

இந்த சோதனை வழக்கு நீதிமன்றங்களில் இரண்டு வருடம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பிற நிலையற்ற குழந்தைகளுக்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வழக்கும் அதன் தரத்தைப் பொறுத்தே கருத்தில் கொள்ளப்படும் என தென் ஆப்ரிக்காவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

160708154824_girl_school__512x288__nocredit

Related posts: