உலக காங்கிரஸ் மையத்தின் வெளிப்புறம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Friday, February 17th, 2017

ஜேர்மனியின் பொன் நகரில் நடைபெறவுள்ள  அமைச்சர்களின் சந்திப்பின் நிமித்தம் உலக காங்கிரஸ் மையத்தின் வெளிப்புறம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உலகின் பல முக்கிய உயர்மட்ட இராஜதந்திரிகளுக்கு இடையில் இன்றும் நாளையும் என இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, அமெரிக்காவின் புதிய நிர்வாக பிரச்சினைகள், வட கொரியாவின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகள், ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளதாக கூறப்படும் புதிய ஏவுகணை விவகாரம் மற்றும் சிரியா, யேமன், உக்ரைன் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2016-11-30-logo_g20_gipfel_2017_in_hamburg

Related posts: