உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்!

Friday, February 15th, 2019

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ‘superjumbo’ விமானத்தின் தயாரிப்பை ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானத்தின் கடைசி விநியோகம் 2021 ஆம் ஆண்டு இடம்பெறும் என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏ380 விமானத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளரான எமிரேட்ஸ் அதன் கொள்வனவை குறைத்துக் கொண்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது

அதிக திறன் கொண்ட சிறிய ரக விமானங்களுடன் போட்டியிட அதிக விலைகொண்ட விமானங்கள் போராடி வருகின்றன.

புகழ்பெற்ற போயிங் 747 விமானத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்ட ஏ380 விமானம் விசாலமான தனிப்பட்ட அறைகள் மற்றும் அறைகளுடன் 544 பேர் பயணிக்கக் கூடிய இரண்டு தட்டுகள் கொண்டதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: