இலங்கை – சீனா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Sunday, October 30th, 2016

சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிதல் தொடர்பாக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைவாக சீனாவின் விஷேட நிபுணர் குழுவொன்று டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கை சார்பாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் சீனா சார்பாக அந்நாட்டின் விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.

அத்தோடு வடமத்திய மாகாண மக்களே அதிகமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும்நாட்டின் 12 மாவட்டங்களில் பரவலாக காணப்படுகின்ற சிறுநீரக நோய் தேசிய அனர்த்தம் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக, சிறுநீரக நோய்க்கான காரணங்களை கண்டுபிடித்தல் மற்றும் ஆரம்பத்திலே அறிந்து கொள்வதற்கான ஆய்வு உபகரணங்கள் வழங்குதல் உட்பட சிறுநீரக நோயாளர்களின் தரவுகளை நவீன உலகத்திற்கு ஏற்றவகையில் புதுப்பித்தல் போன்றவையும் மேற்கொள்ளப்படவுள்ளன.

china-flag copy

Related posts: