இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச போட்டியை முற்றாக கைப்பற்றுவோம்: டி வில்லியர்ஸ்!

Tuesday, February 7th, 2017

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை 5-0 என்ற வகையில் கைபற்றுவோம் என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. கேப் நகரில் நடைபெறவுள்ள இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்த தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏ.பி டிவில்லியர்ஸ் ‘இலங்கை அணியுடனான இந்த தொடரை ஐந்துக்கு பூச்சியம் என்ற வகையில் முற்றாக கைப்பற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரையில் இடம்பெற்றுள்ள மூன்று போட்டிகளிலும், தொன்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1424682186-4426

Related posts: