இந்தியப் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் நீண்ட நேர கலந்துரையாடல்!

Thursday, May 5th, 2022

பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை தலைநகர் பாரிஸில் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர்.

அவர்களை சந்தித்த பின், பிரெஞ்சு அதிபரின் அதிகாரப் பூர்வ இல்லமான எலிசீ அரண்மனைக்கு சென்ற மோடியை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கட்டிப்பிடித்து வரவேற்றார்.

பின்னர் இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தியதாக மத்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத் தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எனது நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திப்பதில் எப்போதும் போல் மகிழ்ச்சி என்றும், இருதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் பேசினோம் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, விரைவில் இந்தியா வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

பிரதமரின் இந்த பயணத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பிரான்ஸ் பிரதமர் ஜீன்-யவ்ஸ் லு டிரியனையும் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: