இங்கிலாந்து -ரஷ்யா எல்லையில் இராணுவம் குவிப்பு!

Thursday, October 27th, 2016

இங்கிலாந்து அரசு சமீபத்தில்  ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியது. இந்நிலையில் ரஷ்யா கடந்த மாதம் அணு வெளியேற்றுதல் சோதனையை மேற்கொண்டது, அது வெற்றிகரமாக முடிந்ததால் இதை மேற்கு நாடுகள் மீது பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று மறைமுகமாக ரஷ்யா தெரிவித்தாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானதாங்கி போர்க்கப்பல் ஒன்று கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து கடல் வழியாக சென்றது. இதனால் இங்கிலாந்து முழுவதும் உஷார் நிலை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் கூட வான்வழித்தாக்குதலுக்கான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பான வீடியோ ஒன்றையும் அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. இது குறிப்பாக இங்கிலாந்து அரசுக்கு எச்சரிக்கை விடுவது போல் இருந்தாக கூறப்பட்டது.

இதன் காரணமாக இங்கிலாந்து அரசு எச்சரிக்கையுடன் இருப்பதற்காக ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட இராணுவவீரர்களையும், பீரங்கிகளையும் மற்றும் சில பட்டாலியன்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் இங்கிலாந்து பாதுகாப்புச் செயலாளர் மைக்கல் பலான் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இங்கிலாந்து அரசு ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியதை ரஷ்ய அரசு பலவீனமாக எடுத்து கொள்வதாகவும், துருக்கி அரசு இங்கிலாந்துக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், இதன் காரணமாகக் கூட ரஷ்யாவுக்கும், இங்கிலாந்து இடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்படுகிறது.

1549537_198225150384809_765951259_n copy

Related posts: