ஆப்ரிக்கா கண்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று!

Friday, June 12th, 2020

ஆப்ரிக்கா கண்டத்தில் கொரேனா தொற்று வேகமாக பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு கொரோனா தொற்றாளளார்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினை கடந்துள்ளது.

உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 3 வீதம் ஆப்ரிக்க கண்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்ரிக்கா கண்டத்தில் வேகமாக கொரோனா தொற்று பரவி வருவதாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுவரை கொரோனா தொற்றினால் 5 ஆயிரத்து 635 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts: