பங்களாதேஷில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்பு!

Saturday, July 2nd, 2016

 

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான டாக்கா உணவகத்தி்ல் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இரண்டு இலங்கையர்களும் பங்களாதேஷிலுள்ள இராணுவ வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டிற்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் சேசத் தாம்புகல தெரிவித்துள்ளார்.

பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாதெனவும் பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது. 8 முதல் 9 வரையான கிளர்ச்சியாளர் குழுவினர், டாக்காவிலுள்ள உணவகமொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த சிலரை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்தனர்.

கிளர்ச்சியாளர்களுடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் பங்களாதேஷ் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்தனர். பணயக் கைதிகளை மீட்பதற்காக பங்களாதேஷ் கமாண்டோ படை வீரர்கள் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கையின் மூலம் 10 பணயக் கைதிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related posts: