அமெரிக் அதிபர் டிரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டை அடியோட மறுக்கும் ஒபாமா!

Sunday, March 5th, 2017

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா அடியோடு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

இதில் குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார்.

இந்நிலையில் தான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட, அக்டோபர் மாதத்தில் அப்போதைய ஒபாமா அரசால் தனது டெலிபோன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், அதிபர் தேர்ல் நடைபெறுவதற்கு சற்று முன் தனது டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்டதுடன் முறைகேடாக பதிவும் செய்யப்பட்டது. இதற்கு அப்போதைய அதிபர் ஒபாமாவே காரணம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிரம்பின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் சாதாரண அமெரிக்க குடிமகன் உள்பட யாருடைய தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட வில்லை. இது தொடர்பாக ஒபாமா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Related posts: