அமெரிக்கா – வடகொரியா ஜனாதிபதிகளுக்கிடையே அடுத்த மாதம் நேரடி சந்திப்பு!

Wednesday, May 9th, 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் யுன் ஆகியோருக்கு இடையேயான நேரடி சந்திப்பு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அமெரிக்க மற்றும் வடகொரிய தரப்பினருக்கிடையில் குறிப்பிட்ட இடத்தில் குறித்த திகதியில் உச்சிமாநாடு இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும் மேலதிகவிபரங்களை அவர் வெளியிடாத போதிலும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதேவேளை முக்கியத்துவம் வாய்ந்த இந்த உச்சிமாநாடு சிங்கப்பூரில் நடைபெறலாம் என தென் கொரிய ‘யன்ஹாப்’ செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டிருந்தது. சிங்கப்பூரில் நடைபெறாவிடின்மங்கோலியா அல்லது சுவிஸ்சர்லாந்தில் இடம்பெறலாம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: