3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திரிகா நீக்கம்!
Friday, August 5th, 2016
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி கிராஸ் ஐலட்டில் தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சந்திரிகாவின் ஆட்டம் மோசமாக உள்ளது. அவர் 2 டெஸ்டில் 53 மட்டுமே எடுத்து உள்ளார். அதிகபட்சம் 31 ரன் ஆகும். சராசரி 13.25.இதனால் 3-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து சந்திரிகா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஷெய்ஹோப் இடம் பெற்றுள்ளார்.
பார்படோசை சேர்ந்த 22 வயதான ஹோப் தொடக்க வீரர் ஆவார். இதுவரை அவர் 6 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அவர் அணிக்கு தேர்வாகி உள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து இருந்தார்.
Related posts:
|
|