2019 உலகக் கிண்ணஅணிக்கு திரும்புவேன் – ப்ரோட்!

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சிரேஷ்ட வீரராக விளங்கும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட், தனது சொந்த மண்ணில், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தில், இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருநாள் அணியில் விளையாட எதிர்பார்த்துள்ளார்.
இவ்வருட ஆரம்பத்தில், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்த ப்ரோட், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில், குழு நிலைப் போட்டிகளில் வெளியேறிய இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்ததோடு, அதன்பின்னர், இரண்டு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியிலேயே இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்தில், அடுத்த வருடம் சம்பியன்ஸ் கிண்ணமும் இரண்டு ஆண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணமும் இடம்பெறவுள்ள நிலையில், அணியில் மீள இடம்பிடிப்பதுக்கு தேவையான அனைத்தையும் செய்யவுள்ளதாக, 30 வயதான ப்ரோட் தெரிவித்துள்ளார்.
இதுவரையில், 121 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியுள்ள ப்ரோட், 178 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Related posts:
|
|