ரசிகர்கள் பாராட்டு மழையில் மத்யூஸ்!

Tuesday, July 2nd, 2019

உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை ஆல்ரவுண்டர் மேத்யூஸ் எடுத்த விக்கெட்டே இலங்கை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரன் அபாரமாக விளையாடி சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். ஆனால் அவரின் விக்கெட்டை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸின் வெற்றி கனவை தகர்த்தெறிந்தார் ஏஞ்சலோ மேத்யூஸ்.

இந்த ஆட்டத்தின் திருப்புமுனையாக பூரனின் விக்கெட் தான் இருந்தது என கூறினால் அது மிகையாகாது.

கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக பந்துவீசாமல் இருந்த மேத்யூஸ் நேற்று பந்துவீச வந்ததோடு தனது முதல் பந்திலேயே கேட்ச் முறையில் பூரனை அவுட்டாக்கி இலங்கை ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தார்.

இதையடுத்து மேத்யூஸ் எடுத்த விக்கெட் தான் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணம் என கூறி ரசிகர்கள் அவரை டுவிட்டரில் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.

Related posts: