தென்னாபிரிக்கா அபார வெற்றி!

Tuesday, October 3rd, 2017

பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 333 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா தமது முதல் இன்னிங்ஸில் 496 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் 247 ஓட்டங்களையும் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 320 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 90 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் கேசவ் மஹாராஜ் 4 விக்கட்டுகளையும், ககிசோ ரபாடா 3 விக்கட்டுகளையும் வீழ்த்தியதுடன், ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் 217 ஓட்டங்களைப் பெற்ற டீன் எல்கர் தெரிவானார்.

Related posts: