நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!

Thursday, March 31st, 2016

டி20 உலகக்கிண்ண போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாணயசுழற்சியில் வென்ற வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

நியூசிலாந்து அணியில் அணித்தலைவர் வில்லியம்சனும், குப்திலும் ஆரம்ப ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள். குப்தில் அதிரடியாக ஆடி ஓட்டங்கள் குவிக்க முயன்று 15 ஓட்டங்களில் டேவிட் வில்லி பந்தில் ஆட்டமிழந்தார்.

அணியின் ஓட்டம் 91 ஆக இருந்த போது வில்லியம்சன் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முன்ரோ 47 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிளாங்கெட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.சகலதுறை ஆட்டக்காரர் கோரி ஆண்டர்சன் 23 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் வீழ்ந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ராஸ் டெய்லர், எலியட், ரோன்ச், மிட்செல் சான்ட்னெர், மிட்செல் மெக்லேனகன் ஆகியோரால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளித்து ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை.இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியில் ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்கிய ஜேசன் ராய் 78 ஓட்டங்கள் குவித்து நல்ல ஆரம்பத்தை கொடுத்தார்.

சோதி வீசிய 17வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 17,1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.பட்லர்(32), ஜோ ரூட்(27) ஆட்டமிழக்காமல் இருந்தனர், ஆட்டநாயகன் விருது ஜேசன் ராய்க்கு கொடுக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

Related posts: