வங்கதேசத்தை மிரட்டி உலகசாதனை படைத்த மில்லர்!

Monday, October 30th, 2017

வங்கதேசத்துக்கு அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது டி-20 போட்டி போலிம்பாண்டெனில் நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணிக்கு ஹசிம் அம்லா, மொசேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

மொசேல் 5 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டுமினி 4 ஓட்டங்களிலும், டி வில்லியர்ஸ் 20 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு மில்லர், 35 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரிகள் என டி-20 அரங்கில் அதிவேக சதம் விளாசி உலகசாதனை படைக்க, தென் ஆப்ரிக்க அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்கள் குவித்தது.

35 பந்தில் சதம் அடித்த மில்லர், டி-20 அரங்கில் அதிவேக சதம் விளாசி உலக சாதனை படைத்தார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்ட் லீவி (45 பந்துகள்) டி-20 அரங்கில் அதிவேக சதம் விளாசிய உலக சாதனை படைத்தார்.

அதுமட்டுமின்றி மில்லர் இப்போட்டியில் 101 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.225 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு சவுமியா சர்க்கர்(44) மட்டும் ஆறுதல் அளிக்க, வங்கதேச அணி 18.3 ஓவரில் 141 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக டெஸ்ட் தொடர் (2-0), ஒருநாள் தொடர் (3-0) என கைப்பற்றியிருந்த தென் ஆப்பிரிக்கா அணி, வங்கதேச அணியை வெறும் கையுடன் தாயகம் அனுப்பியுள்ளது.

Related posts: