மீண்டும் புதிய சாதனை படைத்தார் ஆசிகா!

Thursday, July 5th, 2018

தேசிய சாதனையொன்றைப் பதிவுசெய்த ஒன்பது நாள்களுக்குள் மற்றொரு சாதனையைப் பதிவுசெய்தார் வி.ஆசிகா.
இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடர் திருகோணமலை அக்கிரபோதி தேசிய கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பளுதூக்கலில் 63 கிலோ எடைப் பிரிவில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த விஜயபாஸ்கர் ஆசிகா 178 கிலோ பளுவை தூக்கி தனது சாதனையை தானே முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
இவர் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற திறந்த வயதுப் பிரிவினருக்கான பளுதூக்கலில் சினெச் முறையில் 76 கிலோ பளு கிளின் அன்ட் ஜக் முறையில் 97 கிலோ பளு என ஒட்டு மொத்தமாக 173 கிலோ பளுவை தூக்கி தேசிய சாதனை படைத்திருந்தார்.
ஆனால் நேற்று நடைபெற்ற இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கலில் சினெச் முறையில் 77 கிலோ பளு கிளின் அன்ட் ஜக் முறையில் 101 கிலோ பளு என ஒட்டுமொத்தமா 178 கிலோ பளுவைத் தூக்கி ஒன்பது நாள்களுக்குள் மீண்டும் புதிய சாதனையைப் பதிவு செய்தார்.
அத்துடன் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் சிறந்த பளுதூக்கல் வீராங்கனையாகவும் தெரிவாகினார்.

Related posts: