பிரைன் விட்டோரியின் பந்துவீச்சில் சந்தேகம்!

Thursday, December 1st, 2016

சிம்பாப்வே அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரைன் விட்டோரி .சி.சி. விதிமுறையை மீறி பந்துவீசுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைசிம்பாப்வே மோதிய  முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டியில் பிரைன் விட்டோரி விதிமுறையை மீறி 15 பாகைக்கும் அதிகமாக கையை மடித்து பந்தை வீசுவதாக போட்டி அதிகாரிகள் சிம்பாப்வே கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளனர்.

இந்த போட்டியில் விட்டோரி 52 ஒட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார்.விட்டோரி இவ்வருடம் ஜனவரியில் பங்களதேஷ் அணிக்கெதிரான டி20 போட்டியில்  .சி.சி. விதிமுறையை மீறி பந்துவீசுவது கண்டறியப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி மாதம் இவருக்கு பந்து வீச தடைவிதிக்கப்பட்டது.எனினும் பந்தவீச்சு பாணியை மாற்றிக்கொண்ட விட்டோரிக்கு .சி.சி.மீண்டும் பந்துவீச அனுமதியளித்தது.இதன்படியே இவர் கடந்த முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டியில் பந்துவீசினார்.எனினும் இவர் மீண்டும் விதிமுறையை மீறி பந்துவீசுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதனால் இவரது பந்துவீச்சினை ஆராய்வதுடன், குறித்த அறிக்கையை 14   நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Zimbabwe bowler Brian Vitori delivers a ball during the final of the Blue Mountain Achilleion tri-series played between Sri Lanka and hosts Zimbabwe at the Queens Sports Club in Bulawayo, on November 27 2016. / AFP / Jekesai Njikizana        (Photo credit should read JEKESAI NJIKIZANA/AFP/Getty Images)

Related posts: