புதிய சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்!

Friday, April 27th, 2018

ஷகிப் அல் ஹசன், டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் ஆகியவற்றை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். இவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில், இவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஷகிப் அல் ஹசன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம், டி20 போட்டிகளில் 4000 ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் வெயின் பிராவோ 380 போட்டிகளில் 5607 ஓட்டங்களும், 417 விக்கெட்டுகளும் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வெயின் பிராவோவிற்கு அடுத்த இடங்களில் லசித் மலிங்கா (348), சுனில் நரேன் (325), ஷாகித் அப்ரிடி (300) ஆகியோர் உள்ளனர்.

Related posts: