கபில்தேவை தாண்டிய ஹெராத்!

Thursday, October 5th, 2017

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், முன்னாள் இந்திய வீரர் கபில்தேவின் (99 விக்கெட்டுகள்) சாதனையைப் கடந்து ஹெராத் (101 விக்கெட்டுகள்) சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத், டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய ரங்கனா ஹெராத் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் இந்தப் போட்டியில் இவர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.ஹெராத், இதுவரை 84 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை முத்தையா முரளீதரன் 72 போட்டிகளிலும், ரிச்சர்ட் ஹட்லீ 80 போட்டிகளிலும், டேல் ஸ்டெயின் 80 போட்டிகளிலும் படைத்துள்ளனர்.

இச்சாதனையைப் படைக்கும் முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமை ஹெராத்தைச் சென்றடைகிறது. மேலும் இவர், சர்வதேச அளவில் இந்த சாதனையைப் படைக்கும் 14-வது வீரர் ஆவார்.39 வயதான ஹெராத், சர்வதேச அளவில் 400 விக்கெட்டைக் கைப்பற்றும் மூத்த வீரர் ஆவார்.

இதற்கு முன் ரிச்சர்ட் ஹாட்லி 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 400வது விக்கெட்டைக் கைப்பற்றினார். அப்போது அவருக்கு 38 வயது.பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், முன்னாள் இந்திய வீரர் கபில்தேவின் (99 விக்கெட்டுகள்) சாதனையைப் பின்னுக்குத் தள்ளி, ஹெராத் (101 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார்.முதல் 100 விக்கெட் 29 போட்டிகளிலும், இரண்டாவது 100 விக்கெட் 18 போட்டிகளிலும், மூன்றாவது 100 விக்கெட் 22 போட்டிகளிலும் கைப்பற்றிய ஹெராத், அதன் பின்னர் வெறும் 15 டெஸ்ட் போட்டிகளில் அடுத்த 100 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: