பிரபல கார் பந்தய வீரர் விபத்தில் பலி!

Saturday, March 18th, 2017

சென்னையை சேர்ந்த பிரபல கார் பந்தய விரர் அஸ்வின் சுந்தரும் அவர் மனைவியும் கார் விபத்தில் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர் அஸ்வின் சுந்தர் (31), பிரபல கார் ரேஸ் வீரரான இவர் 2003ல் இருந்து 2013ம் ஆண்டு வரை கார் ரேஸ்களில் பல சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அஸ்வின் தனது மனைவியுடன் சென்னையில் எம்.ஆர்.சி நகர் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கார் அஸ்வினின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து கொண்டதால் காரில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related posts: