பாராஒலிம்பிக் போட்டி: ரஷ்யக் கொடியால் சர்ச்சை!

ரியோவில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் ரஷ்யக் கொடியுடன் வந்த பெலாரூஸ் நாட்டு அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ளார். போட்டிகளுக்கான அவரது அனுமதியும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
அரச ஊக்குவிப்பில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்துகளை பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில், இப்போட்டிகளில் பங்குபெற ரஷ்ய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமது நாட்டு அதிகாரி ஒருவர் ரஷ்யக் கொடியை ஏந்திச் சென்றது, உள்ளணர்வின் காரணமாக அநிச்சையாக இடம்பெற்ற நடவடிக்கை அல்ல, அது தமது நாடு ரஷ்யாவின் மாற்றுத் திறனாளிகளுக்கு காட்டும் ஆதரவின் வெளிப்பாடே என்று பேலாரூஸ் அதிபரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இப்படியான நல்லெண்ண ஆதரவை வெளிப்படுத்துவதை மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச சம்மேளனம் அனுமதிப்பதில்லை.உலகெங்கிலும் இங்கு வந்துள்ள நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்குபெறுகின்றனர்.முதல் நாள் போட்டியில் மட்டும் 38 தங்கப் பதக்கங்கள் முடிவாகின்றன.
Related posts:
|
|