திசார பெரேரவின் கனவு நனவானது : சொந்த மண்ணில் இலங்கையிடம் மண்டியிட்டது இந்தியா!

Sunday, December 10th, 2017

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 38.2 ஓவர்கள் நிறைவில் 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.இந்திய அணி சார்பாக மகேந்திர சிங் தோனி 65 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் சுரங்க லக்மால் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.அவர் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா , கார்த்திக், பாண்டே மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரின் விக்கட்டுக்களை  கைப்பற்றினார்.

இரண்டு விக்கட்டுக்களை பெற்றுக்கொண்ட நுவன் பிரதீப் , ஷிரியாஸ் ஐயர் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரின் விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அஞ்சலோ மத்திவ்ஸ், திசர பெரேரா , தனஞ்சய மற்றும் பதிரண ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு 113 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதில் , அதிரடியாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 46 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.அஞ்சலோ மத்திவ்ஸ் 25 ஓட்டங்களையும் மற்றும் நிரோஷன் திக்வெல்ல 26 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றனர்.