அன்டி முர்ரே மீண்டும் முதலிடம்!

Monday, November 21st, 2016

ஏடிபி உலக டென்னிஸ் போட்டியில் 5 முறை சாம்பியனாக விளங்குகிற நோவாக் ஜோகோவிச்சை தோற்கடித்துள்ள பிரித்தானியாவின் அன்டி மர்ரீ, இந்த போட்டியில் தன்னுடைய முதலாவது பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

ஏடிபி எனப்படும் டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களின் கூட்டமைப்பு நடத்துகின்ற இந்த போட்டியில் வென்றிருப்பதன் மூலம், 2016 ஆம் ஆண்டின் இறுதியை உலக தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் இருப்பதை தொடர்கின்ற வீரராக அன்டி மர்ரீ நிறைவு செய்ய இருக்கிறார்.

இலண்டனின் ஒ2 விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் 6-3, 6-4 என்ற கணக்கில் மர்ரீ வெற்றி பெற்றார்.இதன் மூலம் 29 வயதாகும் மர்ரீ 24 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிவாகை சூடிய வீரராக வலம் வருகிறார்.

நான்கு ஆண்டுகளாக இந்த பட்டத்தை தொடர்ந்து வென்று வந்த ஜோகோவிச்சின் வெற்றி பயணத்தை, மர்ரீயின் இந்த வெற்றி, முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் மொத்தம் ஆறு முறை வெற்றி பெற்ற ரோஜர் ஃபெடரரின் வரலாற்று பதிவை செர்பிய வீரரான ஜோகோவிச் சமன் செய்திருப்பார்.

இந்த இரு வீரர்களும் மோதியிருக்கும் 34 ஆட்டங்களில் 10-இல் மர்ரீ வென்றுள்ளார். இலண்டனின் ஒ2 அரேனா அரங்கு உள்ளடக்கக்கூடிய 17 ஆயிரம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட இந்த ஆட்டம், ஒரு டென்னிஸ் விளையாட்டு என்பதை விட ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் குத்துசண்டை நடப்பது போன்ற உணர்வை வழங்கியது.

_92574744_835a7703-4a09-4597-8407-2716829a47cf

Related posts: