தடகளத்தில் தங்கத்துடன் உலக சாதனை படைத்த இந்திய வீரர்!

Sunday, July 24th, 2016

சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

போலந்தில் பிட்கோசெஸ்க் நகரில் சர்வதேச தடகள சம்மேளனம் சார்பாக ஜுனியர் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் 18 வயது இந்திய வீரர் நீரஜ், 86.48 மீற்றர் ஈட்டியை வீசினார். இதற்கு முன் லாத்வியா வீரர் சிஜிஸ்முன்ட்ஸ், 84.69 மீற்றர் துாரம் வீசியதே உலக சாதனையாக இருந்தது.

முதல் முயற்சியில் 79.66 மீற்றர் தூரம் வீசிய நீரஜ் 2வது முயற்சியில் தான் இந்த உலக சாதனையை படைத்தார்.லண்டன் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள டிரினிடாட் டொபாக்கோ வீரர் கெசோன் வால்காட், இந்த ஆண்டில் அதிகபட்சமாக 86.35 மீட்டர்தான் வீசியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ஜுனியர் தடகளப் போட்டியில் இந்தியா 2 (2003, 2014ம் ஆண்டு) வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. தற்போது முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

Related posts: