ஜொலிஸ்ரார் வெற்றிக் கிண்ணம் இரண்டாவது சுற்றில் யூனியன்ஸ்!

Friday, July 13th, 2018

ஜொலிஸ்ரார் வெற்றிக் கிண்ணத்திற்காக ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் வருடாவருடம் நடத்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட தொடரின் 7 ஆவது போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது யூனியன்ஸ் அணி ஜொலிஸ்ரார் கோவ்ஸ் அணியை ஒரு இலக்குகளில் வெற்றிபெற்று 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ரார் கோவ்ஸ் அணி 30 ஓவர்களில் 5 இலக்குகளை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

கோமெயின்தன் – 79, ஜெயகீதன் – 11, ஜனுஸன் – 20, அனகாலன் – 25, வரூன் – 26 ஓட்டங்களைப் பெற்றனர்.

5 பந்து வீச்சாளர்கள் தலா ஒரு இலக்கினைக் கைப்பற்றினர். 223 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய யூனியன்ஸ் அணி 9 இலக்குகளை 225 ஓட்டங்களைப் பெற்றது.

ஜான்சன் – 57, பிரசாந் – 47, ஆகீசன் – 16, தயானன் – 29, து~;யந்தன் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

கோமெயின்தன் – 04, அனீகலன் – 02, சாருஜன், பிருந்தாபன், துசி தலா 01 இலக்கினைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் மூலம் யாழ் சென்றல் விளையாட்டுக் கழகம் 9 ஆவது ஆண்டாக நடத்திவரும் யாழ் நகரில் சிறந்த கழக அணித் தெரிவு நிகழ்விற்கு யூனியன்ஸ் அணி 5.85 புள்ளிகளையும் ஜொலிஸ்ரார் கோவ்ஸ் அணி 3.12 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.

Related posts: