சிம்பாப்வே  அணி படுதோல்வி  !

Tuesday, February 20th, 2018

சிம்பாப்வே அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

சார்ஜாவில் நேற்று இடம்பெறும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி ஆப்கானிஸ்தாஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்த சிம்பாப்வே அணி, 32.1 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதன்படி, இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 146 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் தொடரை, ஆப்கானிஸ்தான் அணி 4க்கு ஒன்று என்ற ரீதியில் கைப்பற்றியது.

Related posts: