இந்தியாவைத் தோற்கடித்ததால் அதிஷ்டம்!

Thursday, July 6th, 2017

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். கோப்பையை வென்ற பாகிஸ்தானுக்கு ரூ.14 கோடியும், இறுதிச் சுற்றில் தோற்ற இந்தியாவுக்கு ரூ.7 கோடியும் பரிசாக வழங்கப்பட்டன.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித்தந்ததைத் தொடர்ந்து, ஒரு நாள் போட்டியின் கேப்டனான சர்ஃப்ராஸுக்கு டெஸ்ட் கேப்டன் பதவியை அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி 32-வது டெஸ்ட் கேப்டன். இதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாகியுள்ளார் சர்ஃப்ராஸ். அக்டோபரில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃப்ராஸ் கேப்டனாகச் செயல்படுவார்.

Related posts: