உலகக் கிண்ணத் தொடர் – வெற்றிபெற்றது நியூசிலாந்து அணியே : நடுவர்களின் தீா்ப்பில் நடந்தது என்ன?

Tuesday, July 16th, 2019

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்ட வெற்றியானது நியூசிலாந்துக்கு சேர வேண்டியது என கிரிக்கட்ட விமர்சகர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

242 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி மூன்று பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டிருந்தது.

இதன்போது இறுதி ஓவரில் நான்காவது பந்தினை எதிர்கொண்ட பென் ஸ்டொக், வேகமாக துடுப்பாடியதன் காரணமாக எல்லை கோட்டை நோக்கி பந்து அதிவேகத்தில் சென்றது.

அதனை லாபகமாக தடுத்த நியூசிலாந்து அணியை சேர்ந்த மாட்டின் கப்டில், இரண்டாவது ஓட்டத்தினை பெறுவதற்கு முன்பாக விக்கட்டினை நோக்கி பந்தை வீசுகின்றார்.

இதன்போது இரண்டு ஓட்டங்களை பெற்றுவிட வேண்டும் என முயற்சியில் பென் ஸ்டொக் மிகவும் வேகமாக விரைந்தோடி ஓட்ட நிர்ணய கோட்டில் தனது மட்டையை வைப்பதற்கு முன்பாக எல்லை கோட்டிலிருந்து மாட்டின் கப்டிலால் எறியப்பட்ட பந்து, பென் ஸ்டொக்கின் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு சென்றது.

இதன்போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேன ஏனைய நடுவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஆறு ஓட்டங்களை வழங்கியிருந்தார்.

எனினும் பென் ஸ்டொக் இரண்டாவது ஓட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்பதாகவே கப்டிலால் எறியப்பட்ட பந்து பென் ஸ்டொக்கின் மட்டையில் பட்டு நான்கு ஓட்டங்களுக்கான எல்லையை அடைந்ததனால் ஐந்து ஓட்டங்களை மாத்திரமே வழங்க முடியும் என விமர்சகர்கள் கொந்தளித்துள்ளதோடு, வெற்றியானது நியூசிலாந்து அணிக்கு உரியது என சுட்டிகாட்டியுள்ளதுடன், நடுவா்களின் தீா்ப்பு தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளனா்.

Related posts: