ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம் வெளியிடப்பட்டது!

Monday, April 25th, 2016

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ சின்னத்தை ஜப்பான் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்ட சின்னத்தின் வடிவமைப்பாளர், வேறுஒருவரின் கருத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.எனினும் தாம் கருத்தை திருடி சின்னத்தை உருவாக்கவில்லை என அதன் வடிவமைப்பாளர் கூறியுள்ளார்.

போட்டிகளின் கலாசார தொனிப்பொருட்களை பிரதிநிதித்துவப்படும் வகையில் ஜப்பானின் பாராம்பரிய வர்ணங்களைப் பயன்படுத்தி புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

பல்வகைமையின் ஒற்றுமை தொடர்பான செய்தியை புதிய சின்னம் பிரதிபலிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகத்தை இணைக்கும் அடிப்படை என்ற வகையில் பல்வகைமையை ஊக்குவிப்பதற்கு இந்தப் போட்டிகள் மூலம் எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்ட சின்னம், தாம் வடிவமைத்த சின்னத்தை ஒத்ததாக உள்ளதாக பெல்ஜியம் நாட்டின் ஒலுவியர் டேபே குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும் கருத்தை திருடிய குற்றச்சாட்டை போட்டி ஏற்பாட்டு குழுவினர் ஏற்றுக்கொள்ளாத போதிலும் முதலில் உருவாக்கிய சின்னமாக பயன்படுத்துவதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக கூறியிருந்தனர்.

இதனையடுத்து முதல் தெரிவுசெய்யப்பட்ட சின்னத்திற்கு பதிலாக வேறு ஒரு சின்னத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: