பரபரப்பான கட்டத்தில் கடைசி ஓவரை முஜிப் வீசியது ஏன்!

Wednesday, April 25th, 2018

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், கடைசி ஓவரை சுழல் பந்துவீச்சாளர் முஜிப்பிடம் கொடுத்தது ஏன் என பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்வில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் மோதின.

இந்த போட்டியில், முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து, துடுப்பாட்டம் செய்த டெல்லி அணியில், ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிலைத்து நின்று ஆடினார்.

டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின், சுழற்பந்து வீச்சாளர் முஜிப்பை பந்து வீச கூறினார்.

இதனைத் தொடர்ந்து, முஜிப்பின் ஓவரில் 12 ஓட்டங்களை டெல்லி அணி எடுத்தது. அப்போது, அரைசதத்தைக் கடந்த ஸ்ரேயாஸ் ஐயர், கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் வெற்றி குறித்து அஸ்வின் கூறுகையில், ‘இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கடைசி ஓவரை முஜிப்பிடம் கொடுத்தது ஏன் என்று கேட்கிறார்கள். எல்லோரும் ஆலோசித்தோம்.

இந்தப் போட்டியில் ஆண்ட்ரூ டை நன்றாக பந்து வீசினார். இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தீவிரமாக நினைத்தோம். இதனால் புதிய முயற்சியாக முஜிப்பிடம் கடைசி ஓவரை கொடுத்தோம்.

Related posts: