சாதனைகளுடன் வெற்றி பெற்றது வங்கதேசம்!

Monday, June 3rd, 2019

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

உலகக்கிண்ணம் தொடரின் 5 வது போட்டியானது இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 330 ரன்களை குவித்தது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக சகிப்-அல்-ஹசன் 75 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்களும் எடுத்திருந்தனர்.

331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, நிதானமாக விளையாடினாலும், முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்க தவறியதால் 50 ஓவர்களில் 309 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்த போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்தின் அதிகபட்ச ரன் இது என்கிற சாதனை படைத்தது.

அதேபோல 3 விக்கெட்டிற்கு சகிப்-அல்-ஹசன் – முஷ்பிகுர் ரஹிம் இணைத்து எடுத்த 142 ரன்கள் உலகக்கிண்ணம் போட்டியில் எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

Related posts: