வெற்றியுடன் ஷரபோவா மீள் வருகை!

Saturday, April 29th, 2017

கடந்த 15 மாதகால போட்டித் தடையிலிருந்து மீண்டும் டென்னிஸ் அரங்கம் திரும்பிய ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, தனது மீள் பிரவேசத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற ஸ்டுட்கார்ட் கிராண்ட் பிரிக்ஸ் (Stuttgart Grand Prix) தொடரின் முதல் சுற்றில் பங்கேற்ற ஷரபோவா, இத்தாலிய வீராங்கனையான ரொபர்ட்டா வின்சியை (Roberta Vinci) எதிர்கொண்டு 7:5, 6:3 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

30 வயதான ஷரபோவா, கடந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதுடன், அவருக்கு 15 மாத கால போட்டித்தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், போட்டித்தடைக் காலம் நிறைவடைந்த அவர், ‘வைல்ட் கார்ட்’ சுற்றுமூலம் நேரடியாக இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: