சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்க?

Monday, July 1st, 2019

இலங்கை அணியின் நட்சத்திர மற்றும் அனுபவமிக்க பந்து வீச்சாளரான லசித் மலிங்க, தனது ஓய்வு குறித்து சூசமாக தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த லசித் மலிங்க, தனது கடைசி போட்டியை சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் போராடினேன் … நான் போராடினேன், இப்போது கூட சோர்வாக இருக்கிறேன். டி20 உலகக் கோப்பை விளையாடுவேன் என்று நம்புகிறேன். ஆனால் உலகக் கோப்பைக்குப் பிறகு மீண்டும் இலங்கைக்குச் சென்று அதை இலங்கை கிரிக்கெட் ஆணையத்துடன் விவாதிப்பேன். அவர்கள் என்னுடன் ஒத்துப்போனால், நான் விளையாடுவேன், அல்லது நான் விரைவில் சர்வதேச அரங்கிலிருந்து விலகுவேன் என தெரிவித்துள்ளார்.

எனக்கு 36 வயது. என்னிடம் இருந்த ஆற்றல் தற்போது என்னிடம் இல்லை. ஒரு போட்டியில் என்னிடம் இருப்பதை நான் சிறப்பாகப் பயன்படுத்தினால், அதை வெல்ல எனக்கு வலிமை இல்லை என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

Related posts: