யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி இன்னிங்ஸ் வெற்றி!

Thursday, November 23rd, 2017

இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட மூன்றாம் பிரிவு அணிகளுக்கான துடுப்பாட்டத் தொடரில் அண்மையில் இடம்பெற்ற ஆட்டம் ஒன்றில் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் கண்டி சிறி சுமங்கல கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி சிறி சுமங்கல கல்லூரி அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 201 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. மதுஷன் 44 ஓட்டங்களையும், துஷாந்தன் 42 ஓட்டங்களையும், சாரங்கன் 42 ஓட்டங்களையும், நிஷாந் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் குலதுங்க 6 இலக்குகளையும், அனுஸ்க, சமிர ஆகியோர் தலா 2 இலக்ககளையும் வீழ்த்தினர். பதிலுக்கு களமிறங்கிய கண்டி சிறி சுமங்கல கல்லூரி அணி 99 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. அவிஸ்க 23 ஓட்டங்களையும், இசுறு 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் துஷாந்தன் 6 இலக்குகளையும், மதுஷன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து களத்தடுப்பில் ஈடுபடத்தகுதியற்ற நிலையில் கண்டி சிறி சுமங்கல கல்லூரி அணி தொடர்ந்து துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது. இதன்படி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய கண்டி சிறி சுமங்கல கல்லூரி அணி 70 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்ததை அடுத்து இன்னிங்ஸாலும் ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.

Related posts: