இந்திய கிரிக்கட் அணியின் புதிய தலைமை பயிற்சிவிப்பாளர் தொடர்பில் கங்குலி!

Tuesday, June 27th, 2017

இந்திய கிரிக்கட் அணியின் புதிய தலைமை பயிற்சிவிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளவர் அணியின் தலைவருடன் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடியவராக இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளராக இருந்த அனில் கும்பே பதவி விலகியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார். இதேவேளை , இந்திய அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விண்ணப்பிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

எவ்வாறாயினும் , அவ்வாறான எவ்வித எண்ணமும் தனக்கு இல்லை என தனது ட்விட்டர் வலைத்தளத்தில் மஹேல குறிப்பிட்டுள்ளார். மேலும் , தான் தற்போது தலைமைப் பயிற்சிவிப்பாளராக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குலனா டைடன்ஸ் அணிகள் தொடர்பிலேயே தனது கவனம் உள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.இந்திய கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சிவிப்பாளர் பதவிக்கு தான் நியமிக்கப்படலாம் என வௌியாகியிருந்த செய்தி தொடர்பில் தான் பெருமை கொள்வதாக அவர் தனது ட்விட்டர் வலைத்தளத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

Related posts: