கால்பந்து இரசிகனை காவு கொண்ட புற்றுநோய்!

Sunday, July 9th, 2017

கால்பந்தினை அதிகம் நேசித்த ஒரு சின்னஞ்சிறு பிஞ்சின் மரணம் கால்பந்து உலகினையே ஒரு கனம் சோகத்திற்குள் தள்ளியுள்ளது.

கால்பந்து ரசிகனாக எல்லோராலும் அதிகம் அறியப்பட்ட இங்கிலாந்தின் 6 வயதான பிராட்லி லௌரி நேற்று மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார். அவர் மரணமடைந்த செய்தியினை அவனது பெற்றோர் அறிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளான். இச் சிறுவன் இங்கிலாந்து கால்பந்து வீரர்களாலும்இ ரசிகர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒரு தீவிர ரசிகனாக திகழ்ந்துள்ளான்.

கடந்த 18 மாதங்களாக புற்றுநோய் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையிலேயே இச் சிறுவன் மரணத்தை தழுவியுள்ளான்.பிரபலமான எவெர்டன் கால்பந்து கழகம் குறித்த சிறுவனின் மருத்துவ தேவைகளுக்காக இதுவரையில் 2 லட்சம் பவுண்ட்ஸ் நிதி உதவியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: