இந்திய அணியின் துணை தலைவரான ரகானேக்கு கிடைத்த கௌரவம்!

Monday, November 13th, 2017

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் முதன்யைான உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபி தொடரின் 2017-18 தொடரில் 5-வது கட்ட லீக் போட்டிகள் தொடங்கின.

ஒரு போட்டியில் மும்பை – பரோடா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், 41 முறை ரஞ்சி கிண்ணத்தை கைப்பற்றிய மும்பைக்கு இது 500-வது ரஞ்சி கிண்ண போட்டியாகும்.

இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக் தலைவரான ரகானே இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் 500-வது போட்டியில் பங்கேற்ற மும்பை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூரில் நடைபெற்றது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் ஆகும். இந்த போட்டியிலும் ரகானே இடம்பிடித்திருந்தார்.

இதன்மூலம் இரண்டு முறை 500-வது போட்டியில் கலந்து கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையை ரகானே பெற்றுள்ளார்.

Related posts: