‘வடக்கின் போர்’  முதலாம் நாள் நிறைவு!

Thursday, March 8th, 2018

யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி பாடசாலை அணிகளுக்கிடையான 112வது கிரிக்கட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றையதினம் ஆரம்பமானது.

எஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியனான சென் ஜோண்ஸ் கல்லூரியினரும் இன்றைய 112வது போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.

யாழ் மத்திய கல்லூரி அதிபர் எழில் வேந்தன் மற்றும் சென் ஜோன் கல்லூரி அதிபர் ஞானபொன்ராஜா ஆகியோர் தலைமையில் இன்றுகாலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வீரர்கள் அறிமுகம் மற்றும் நாணயச்சுழற்சி இடம்பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார்

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய சென் ஜோன் கல்லூரி அணி 77.1 ஓவர்கள் விளையாடி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.

குறிப்பாக அவ்வணியின் சார்பில் ஆரம்ப வீரரார களம் இறங்கிய வீரர் செரூபன் சிறப்பாக ஆடி 65 ஒட்டங்களை பெற்றிருந்ததுடன் மற்றொரு ஆட்டக்காரரான எல்சான் 32 ஓட்டங்களை அதிக பட்டசமாக பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் மத்திய கல்லூரி அணி சார்பில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட றியாஸ்கான் மற்றும் ஜெயதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

எனினும் தொடக்க ஆட்டக்காரரிர் ஒருவரான றியாஸ்கான் ஐந்து ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் இன்றைய ஆட்டநேர முடிவின்போது யாழ் மத்திய கல்லூரி அணியானது 16 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 43 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விரு பாடசாலை அணிகளிற்குமிடையில் இதுவரை நடைபெற்று முடிந்த 111 போட்டிகளில் 40 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்ததுடன் சென் ஜோண்ஸ் கல்லூரி 36 போட்டிகளிலும் யாழ் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Related posts: