40 சிக்ஸர்களுடன் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்!

Tuesday, October 17th, 2017

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஜோஷ் டன்ஸ்டன் உள்ளூர் போட்டியில் 307 ஓட்டங்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் சார்பில் உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் வெஸ்ட் அகஸ்டா அணிக்கும் சென்ட்ரல் ஸ்டெர்லிங் அணிக்கும் நடந்த போட்டியிலேயே இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில் வெஸ்ட் அகஸ்டா அணிக்காக விளையாடிய ஜோஷ் டன்ஸ்டன் என்பவர் 307 ஓட்டங்களை எடுத்துள்ளார் இதில் 40 சிக்ஸர்கள் அடங்கும்.எனினும் எத்தனை பந்துகளில் ஓட்டங்களை குவித்தார் என்பது குறிப்பிடப்படவில்லை.குறிப்பாக வெஸ்ட் அகஸ்டா குவிந்த ஓட்டங்களின் எண்ணிக்கையே 354 இதில் கிட்டத்தட்ட 86.5 சதவிகித ஓட்டங்களை ஜோஷ் டன்ஸ்டன் மட்டுமே குவித்துள்ளார்.

Related posts: