T -20 கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!
Monday, February 20th, 2017
அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று நடைபெற்ற இரண்டாவது ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டியில் மகத்தான வெற்றியைப் பெற்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய அணியுடனான ரிருவன்ரி போட்டியில் வெற்றித்தொடரை கைப்பற்றிய இலங்கை அணியுடன் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி நாட்டிற்கு புகழை ஈட்டிக் கொடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டியில் திறமையை வெளிப்படுத்திய அசேல குணரத்னவிற்கு விசேடமாக வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முகாமைத்துவ குழுவினருக்கும் பாராட்டுத்தெரிவித்துள்ளார்.

Related posts:
சாதனையை முறியடித்தார் அஸ்வின்!
மீண்டும் புதிய சாதனை படைத்தார் ஆசிகா!
இந்தியா - பங்களாதேஷ் முதல் டெஸ்ட் – தடுமாறும் இந்திய அணி!
|
|
|


