கிரிக்கெட்டை மேம்படுத்த அனைவரும் ஒன்றினைய வேண்டும்!

Thursday, January 26th, 2017

கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினையொட்டிய நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது, பாடசாலைக்குச் சென்று பாடசாலையில் மேற்கொள்ளப்படும் விளையாட்டு செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25ஆவது ஆண்டுநிறைவு விழா நடைபெற்றது.

சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் வை.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கட் வீரருமான சனத் ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட மெதடிஸ்த மத்திய கல்லூரி பாடசாலையின் அதிபர் பி.விமல்ராஜ், பழைய மாணவர்கள், சென்றலைட் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Sri Lanka's cricketer Sanath Jayasuriya reacts as he arrives at a practice session ahead of the T20 tour of England, in Colombo June 10, 2011. Sri Lanka's opening batsman Jayasuriya will retire from all forms of international cricket after the first one-day match of their England tour later this month, he said on Thursday.    REUTERS/Dinuka Liyanawatte (SRI LANKA - Tags: SPORT CRICKET) - RTR2NIKC

Related posts: