அணிக்கு திரும்பும் முன்னாள் வீரர்கள்!
Tuesday, September 12th, 2017இலங்கை அணி பெற்று வரும் தொடர் தோல்வியை தவிர்க்க இலங்கை கிரிக்கெட் வாரியம் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, அரவிந்த டி சில்வா தலைமை கிரிக்கெட் ஆலோசகராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கிரிக்கெட் வாரியம் தன்னுடன் கலந்துரையாடியதாக அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், பிரண்டன் குறுப்பு, கிரகம் லேபோய், மகாநாமா ஆகியோரை தேர்வாளர்களாக நியமிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆலோசகராக செயல்பட மஹேல ஜயவர்தன உதவிகளையும் பெற இலங்கை கிரிக்கெட் வாரியம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
மீண்டும் விஸ்வரூபமெடுத்த டோனி!
மெஸ்சியை மோசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்!
அவுஸ்திரேலியாவை மிரட்டிய பாகிஸ்தான்!
|
|