மாதகல் கடற்பரப்பில் வலையில் சிக்கிய டொல்பின்!

Thursday, September 1st, 2016

மதாகல் கடற்பரப்பில் 7 அடி நீளமான டொல்பின் மீன் தற்செயலாக இறந்த நிலையில் மீனவரின் வலையில் அகப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

இன்று புதன்கிழமை காலை குறித்த மீனவர் மீன் பிடிப்பதற்காக கடலில் வலை வீசியிருந்த போது, அவரின் வலைக்கு இந்த டொல்பின் மீன் அகப்பட்டுள்ளது.

மீனவர் உடனடியாக கடற்படையினருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம், கடற்றொழில் நீரியல் வளத்துறையினருக்கு அறிவித்ததன் பின்னர் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று மீனை பெற்றுக்கொண்டபின்னர்.பகுதியிலே மீனை வெட்டி புதைத்துள்ளனர். இது சுமார் 7 அடி நீளமான 100 கிலோவிற்கும் அதிகமான எடையுடைய டொல்பின் மீன் என்று கூறப்படுகிறது.

dolphin-300x169

Related posts: