ஓசோன் படை தொடர்பில் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

Tuesday, November 7th, 2017

ஓசோன் படையில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் பூமியில் உண்டாகும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் விஞ்ஞானிகள் ஓர் மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது ஓசோன் படையிலுள்ள துவாரம் வர வர சிறிதாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.1988ம் ஆண்டிலிருந்து ஓசோன் படலத்தினை வானியலாளர்கள் அவதானித்து வருகின்றனர்.குறித்த அவதானிப்பின் அடிப்படையிலேயே மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளனர் //www.youtube.com/embed/nV2pBd0F7S4?rel=0″  செப்டெம்பர் மாதமளவில் ஓசோன் படையிலுள்ள துவாரத்தின் பருமனானது 7.6 மில்லியன் சதுர மைல்களாக காணப்பட்டது எனவும், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 1.3 மில்லியன் சதுர மைல்கள் அளவினால் குறைவடைந்த பின்னரான கணிப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆனால் 2000ம் ஆண்டில் 11.5 மில்லியன் சதுர மைல்களாக இருந்தது எனவும் நாசா தெரிவித்துள்ளது.

Related posts: