மீண்டும் வருகிறது நோக்கியா கைப்பேசிகள்!

Friday, October 21st, 2016

உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்த நோக்கியா நிறுவனத்தினை மைக்ரோசொப்ட் நிறுவனம் கொள்வனவு செய்திருந்தமை அறிந்ததே.

அதன் பின்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் நோக்கியா எனும் பெயரிலும் தொடர்ந்து மைக்ரோசொப்ட் எனும் பெயரிலும் விண்டோஸ் இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்தது.

எனினும் எதிர்பார்த்த அளவில் அக் கைப்பேசிகளுக்கு பெரிய வரவேற்பு ஏதும் இருக்கவில்லை.

இப்படியிருக்கையில் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தமானது இவ்வருடத்துடன் முடிவுக்கு வருகின்றது.

எனவே மீண்டும் நோக்கியா நிறுவனம் தனது நாமத்துடன் கூடிய புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இதனை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தின் ஊடாக அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதன்படி இவ் வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் புதிய கைப்பேசி ஒன்று அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எவ்வாறெனினும் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் தமது புதிய ஸ்மார்ட் கைப்பேசி நிச்சியம் இடம்பெற்றிருக்கும் என அந் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.

Nokia

Related posts: