தனது திட்டத்தினை பிற்போடும் நாசா

Thursday, March 29th, 2018

விண்வெளிக்கு பூமியிலிருந்து தொலைகாட்டி ஒன்றினை அனுப்பும் முயற்சியில் நாசா விண்வெளி ஆய்வு மையம் இறங்கியிருந்தது.

வெற்றிகரமான முறையில் உருவாக்கப்பட்ட தொலைகாட்டிக்கு James Webb Space Telescope எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதனை 2019ம் ஆண்டின் வசந்த காலப் பகுதியில் விண்வெளி நோக்கி அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்தது.

எனினும் இத் திட்டம் பிற்போடப்பட்டுள்ளது, இதன்படி 2020ம் ஆண்டு மே மாதத்தில் அனுப்பப்படவுள்ளது.

சுமார் 8 பில்லியன் டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்படும் இத் திட்டம் பிற்போடப்பட்டமைக்கான காரணமும் வெளியிடப்பட்டுள்ளது.

இத் தொலைகாட்டியினை காவிச் செல்லும் விண்வெளி ஓடத்தினை மேலும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டி இருப்பதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: