புதிய தலைமுறை ரோபோவை உருவாக்கியது!

Thursday, November 16th, 2017

சில வருடங்களுக்கு முன்னர் மிருகங்களின் சாயலைக் கொண்ட ரோபோக்களை Boston Dynamics எனும் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது அடுத்த தலைமுறை ரோபோவினை அறிமுகம் செய்துள்ளது.

 SpotMini எனும் குறித்த ரோபோ விலங்கினைப் போன்று ஓடுவதற்கும், நடப்பதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை வீடுகள், அலுவலங்கள் மற்றும் வெளிப்புறங்கள் என்பவற்றில் பயன்படுத்த முடியும்.இதன் எடையானது சாதாரணமாக 25 கிலோ கிராம் எடை கொண்டதாகவும், கைகள் இணைக்கப்பட்ட நிலையில் 30 கிலோ கிராம்களாகவும் காணப்படுகின்றது.மேலும் ஒரு முறை சார்ஜ் செய்த பின்னர் 90 நிமிடங்கள் வரை இயங்கக்கூடியதாக இருக்கும் என்பது விசேட அம்சமாகும்.

Related posts: