உலகின் மெல்லிய லாப்டாப் அறிமுகம்!

Friday, June 24th, 2016

HP நிறுவனம் உலகின் மெல்லிய வடிவிலான HP Spectre 13 என்னும் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த லேப்டாப்பின் வடிவம் 10 மி.மீ மட்டுமே கொண்டுள்ளது. அத்துடன்1.1 கி.கி எடை கொண்டதாக இருக்கும் இது 13.3 இன்ஞ் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த HP Spectre 13 லாப்டாப் sixth generation Intel Core i5 மற்றும் i7 processorsயுடன் வெளிவருகிறது. இதில் 8GB RAM கொடுக்கப்பட்டிருப்பது பயனர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். இதில் SSD சேமிப்பு பகுதியை 512 GB வரை நீடித்துக் கொள்ள முடியும்.

hyperbaric cooling தொழிநுட்பம் லேப்டாப் விரைவில் சூடாவதையும், லேப்டாப்பின் உட்பகுதி சூடால் பாதிப்படைவதையும் தடுக்கிறது.

மேலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக சார்ஜ் நிலைத்து நிற்கும் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் 25ம் திகதி முதல் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த HP Spectre 13 லேப்டாப்பின் விலை ரூ. 1,19,990.

Related posts: